Wednesday, March 31, 2010

கண்ணீர் சிந்தா விழிகள்...!


கண்களின் பொறுப்பு
காட்சிகளைக் காண்பதல்ல,
உணர்ச்சிகளைக் காண்பிப்பதும்

அனைத்து உணர்ச்சிகளும்
யானையின்  மணியோசையாய் 
முன் வந்து நிற்பது இந்தக் கண்களில் 

ஆயினும் சில தருணங்களுண்டு,
அங்கே மனம் வலிகண்டிருக்கும்,
காரணமுமிருக்கும்,
ஆனால், தீயை அணைக்க மறுத்த தீயணைப்பு வீரனாய்
எனோ பின் சென்று மறைந்து
கண்ணீர் மட்டும் சிந்தாது

அப்போது காணலாம்,
கண்ணீர் சிந்தா விழிகளை ..!