மனிதன் உயர்திணையா ? அஃறிணையா?
-ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ..
நடுவர் -கடவுள்
பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .
கடவுள் :
என் இனிய உயிரினங்களே ..
நான் படைத்த உயிரினங்களில்
மனிதன் மட்டும் உயர்திணை
என்ற உயர்ந்த விதியை கொடுத்தேன் ..
ஆனால் இன்று மனிதனே
அதைக் கெடுத்தான்..
விவாத மேடையில் மனிதன் உயர்திணையா ? அஃறிணையா? என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..
முதலில் பேச வருபவர் மனிதன் ..
மனிதன் :
மனிதன் ஏன் உயர்திணை தெரியுமா ?
ஏனென்றால் அவன் மனிதன் .
புதிதாகப் படைப்பவன் ..
பலவற்றைக் கண்டுபிடிப்பவன் ..
சிந்திப்பவன் ..
சிரிப்பவன் ..
உயிரியல் குடும்பத்தில் சிறப்பவன்..
இப்படிப் பல சிறப்புடன் இருப்பவன் ..
அதனால் அவன் உயர்திணை ..
கடவுள் :
விளக்கம் அருமை . அடுத்து குரங்கு .
குரங்கு :
பூக்களைக் கூடக் கொலை செய்து
அதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..
சொன்னபடிக் கேளாமல்
ஒழுக்கத்தோடு வாழாமல் ,
மனம் மாறி மனம் மாறும் ,
குணம் மாறி குணம் மாறும்
கட்சி விட்டுக் கட்சி தாவும்
என்னைப் போல் குரங்கு நீங்கள் ..
கடவுள் :
ஆஹா !பிரமாதம் ..அடுத்துப் பாம்பு ..
பாம்பு :
மனம் இழந்து
குணம் இழந்து
பணம் தேடும்
பிணம் நீங்கள் ..
தன் இனம் அழித்து
அதில் வெற்றியை ருசித்து
உணவுக்காக
எங்கள் இனத்தையே உண்ணும்
என்னைப் போல் பாம்பு நீங்கள் ..
கடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..
யானை :
சுயநலப் பேய் பிடித்தவனுக்கு
அடிக்கடி மதமும் பிடித்துப் போகும் ..
மதம் கொண்டால்
மனதை புதைப்பான்
பிறரையும் அழிப்பான்
என்னைப் போல் ..
கடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..
நாய்:
நான் கூட நன்றியோடு இருக்க
மனிதன் செய்நன்றிக் கொன்றான்
பணத்திற்காகப் பன்றியை போல்
சாக்கடையில் பிரண்டான்..
பருவத்தில் ,
பிற பலரின் பின்னல்
என்னைப் போல்
நாயாக அலைகிறான் ..!
கடவுள் : ஹா ஹா ..அடுத்துப் பூனை
பூனை :
மணமான புதிதில்
தன் துணையை
சுத்தி சுத்தி வரும்போது
பால் கண்ட பூனை யாகிறான் ..
கடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..
பறவை:
பெற்று வளர்த்த
தாய் தந்தையை மறக்கும் போது ..
சிறகு முளைத்து
என்னைப் போல்
கூட்டை விட்டு பறக்கும் போது
பறவையாகிறான்..
பெற்ற குழந்தையை ,
குப்பைதொட்டியில் வீசும்போது ,
தன் முட்டை
அடுத்தவர் கூட்டில் இடும்
குயிலாகிறான் ..
கடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..
முதலை:
பணத்திற்காக
பிணத்திடம் கூடத் திருடி
பிணம் தின்னும் ஓநாயயே ..
தன் காரியம் சாதிக்க
பிறரிடம் என்னைப் போல்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ..
கடவுள் :
அனைத்து விளக்கமும் உண்மை ,
மனிதனின் விளக்கம் தவிர ..
மனிதன் பல மிருகங்களின் கலவை ..
அதனால்
இலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,
மனிதன்
உயர்திணை இல்லை
அஃறிணை..
8 comments:
ஹி ஹி... இப்படி மல்லாக்க படுத்து துப்பிக்கிட்டா என்ன அர்த்தம்...
எதோ ஒரு பத்து சதவிகித மனிதன் செய்யும் தவறுகளால் மீதி இருக்கும் தொண்ணூறு சதவிகித மனிதனையும் தண்டித்து விட்டீர்களோ என்ற எண்ணம் மட்டும் உறுத்தலாய் என் நெஞ்சில்
@Philosophy Prabhakaran s...
உண்மை தான் ..ஆனா என்ன செய்யறது ...
@suryajeeva s...
ஒரு துளி விஷம் கலந்தாலும்
மொத்த பாலும் விஷம் என்ற உவமையை
மிருகங்களும் ,பறவைகளும்
மனிதன் மீது வைத்து பார்த்தால்
நாம் அனைவரும் அஃறினையே
நல்ல பதிவு... நல்ல தலைப்பு...
மூ.பழனிவேல்
http://www.manidam.wordpress.com
@manidam ...
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)
என்னை
தங்கள் வலைத்தளத்தில்
அறிமுக படுத்தியமைக்கு
மிக்க நன்றி தோழரே ...:)
அருமையான பதிப்பு
Post a Comment