Wednesday, October 23, 2013

நாம் சிரிக்கும் நாளே தீபாவளி ...!







குழந்தைகள் குதூகலிக்கும்
காகிதம் மறைத்திருக்கும்
ஒளியும் ஒலியும்
பொக்கே - பட்டாசு தீபாவளி

ஏழைகளின் வயிற்றெரிச்சலில்
வெடித்துப் போகும்
பட்டாசாலை -சிவகாசி தீபாவளி

தன் முதலாளி வீட்டின்
பழையெனக் கழிந்ததை
புதுசெனத் தன் பிள்ளைக்கு
அழகு பார்க்கும் - ஏழை தீபாவளி ..

டாஸ்மாகின் வருமானம்
புது இமையம் ஏற்றிடும்
குடிமக்கள் தீபாவளி ..

திரைகடல் ஓடிய
தனிமையில் வாடிடும்
சில உறவுகள் -தனிமை தீபாவளி ..

தீபாவளி முந்நாள் இரவு
தொங்களில் பயணப்படும்
மண்வாசனை தீபாவளி ..

தொலைகாட்சியில்
தொலைந்து போகிறது
நவயுகக் குடும்பத் தீபாவளி

வேட்டுச் சத்தம் மறந்து
சம்பள நோட்டுக்கு வேலை செய்யும்
கார்ப்ரேட் தீபாவளி ..

ராவணன் வென்ற
ராமன் கதை பேசும்
வடதேச தீபாவளி ..

நரகாசுரன் கொன்ற
கண்ணனை பேசும்
தென்திசை தீபாவளி ..

மொத்தத்தில்
சிரிப்பு வேட்டுச் சத்தம் கேட்க
வாழ்வில் மகிழ்ச்சி ஒலி பூக்க
நாம் சிரிக்கும் எந்நாளும் தீபாவளி ...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்புகிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

தீபாவளி வகைகள் குறித்து
அருமையாக விளக்கிப்போகும்
அற்புதமான கவிதை மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Thooral said...

@Ramani S..

வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@திண்டுக்கல் தனபாலன் said..

மிக்க நன்றி


Anonymous said...

வணக்கம்

தங்களின் மின்அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்….
கவிதை அருமையாக உள்ளது போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-