Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!







மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மௌனமாகச் சிந்தித்ததில்
அது ஆம் என்றது சத்தமாக ..

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
எனக் காதலியிடம் கேட்டக் கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்இன்றும் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய்ச் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்க் கேட்கிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை நினைவில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டிப் போன வேளையில்
மௌனம் காத்த தந்தையின் மௌனங்கள்
என்னைச் சத்தமாகக் குத்திக் காட்டுகிறது ..

உயிரெனக் கலந்த உறவுகள்
உயிரற்றச் சவமாகக் கிடக்கையில்
என்னில் கண்ணீராய்ச் சத்தம் போடுகிறது ..
இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ..

9 comments:

மதுரை சரவணன் said...

//நான் திட்டி போன வேளையில்
மௌனம் காத்த
என் தந்தையின் மௌனங்கள்
என்னை சத்தமாக குத்தி காட்டுகிறது .//

arumai.. vaalththukal

Yaathoramani.blogspot.com said...

மௌனத்தின் பேரிரைச்சலையும்
பேரிரைச்சலில் ஊடாடும் மௌனத்தையும்
உணரத் தெரிந்தததால்தானே
சிறந்த படைப்பாளியாகத் திகழ்கிறீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1

Thooral said...

@ramani..
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி

Thooral said...

@மதுரை சரவணன் ,,

கருத்துக்கு நன்றி

ஹேமா said...

மௌனம்தான் பெரும்சத்தம்.அதன் அலறல் மௌனித்திருப்பவர் ஆழ்மனதுக்கு மட்டுமே கேட்கும்.அருமையான கருவெடுத்த கற்பனை ஜெயராம் !

vetha (kovaikkavi) said...

உங்கள் மௌனம் பார்த்து எனது மௌனம் ஒன்றைத் தருகிறேன் வாசித்துப் பாருங்கள்.ஆம் மௌனம் பேசும் நல்ல ஆய்வு வாழ்த்துகள்.
http://kovaikkavi.wordpress.com/2010/09/09/62-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/
http://www.kovaikkavi.wordpress.com

vimalanperali said...

சப்தமிடும் மெளனங்கள் எங்கும் எப்பொழுதும் உறங்கிக்கிடப்பதுமில்லை,மாறாக விழித்துக்கிடப்பதும் இல்லை.மெளனப்புரட்சி என்பதற்கான் அர்த்தங்கள் பலவாய் இந்த தேசத்தில்/

நம்பிக்கைபாண்டியன் said...

உங்கள் கவிதைத்திறன் மெருகேறி வருவதினை
இந்த கவிதை மெளனமாக உணர்த்துகிறது!

தமிழினம் ஆளும் said...

//எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்
சத்தம் போடுகிறது ..

அருமை