Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு






கரை தொட்டு
பின் செல்லும் அலைகள் 
எதோ ஒன்றை
கரையில் 
நுரையாய் எழுதிச் செல்கிறது ..

எழுதிச் செல்லும் பொழுது
ஏதோ ஒன்றை கரையிடம்
சத்தமாகச் சொல்லி விட்டுச்  செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தைக் கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்றுப் படிக்கும் பொழுதுகளில் 
அந்த எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்தப் பேச்சைக் கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாக எழுதிச் செல்கிறது ...

சற்று 
புரியும் பொழுது 
அது தன் பேச்சை
நிறுத்திக் கொள்கிறது  ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும் பல்வேறு
புரியாத மர்மங்கள் போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

4 comments:

Anonymous said...

''...உலகிலிருக்கும்
பல்வேறு
புரியாத மர்மங்களைப்போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...! ''
மிகச் சரியான வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

ஹேமா said...

சில மொழிகளற்ற சத்தங்களுக்கு நாமே வடிவம் கொடுத்தல் அழகு.அதுபோலத்தான் உங்கள் கவிதையும் !

Unknown said...

//கரை தொட்டுவிட்டு
பின் செல்லும் அலைகள் யாவும்
எதோ ஒன்றை
கரையின் மேல்
நுரையாய் எழுதிவிட்டு செல்கிறது//

தங்களின் கற்பனை வளத்திற்கும், கவிதை உளத்திற்கும் இவ்வரிகளே போதும் எடுத்துக்காட்ட
அருமை சகோ!
புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

// "ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது."

மிக எளிதாக பெரும் கருத்தை விதைத்துள்ளீர்கள்.
மிகவும் அழகு..