தூறல்
எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
Friday, September 25, 2026
Friday, September 18, 2026
தரிசனம்
திருவிழா முடிந்த மறுநாள்
யாருமற்ற சந்நிதியில்
கடவுளைச் சந்திக்க
சென்றேன்
கூட்டம் அதிகம் என்பதால்
நேற்று இங்கு வரவில்லை
என்றேன்
நானும் தான்
என்றபடி
புன்னகைத்தார்
Saturday, August 1, 2026
Friday, July 17, 2026
Friday, April 17, 2026
ஓட்டுரிமை
முதலையின் பற்களின் இடுக்குகளில்
மாமிசம் கொத்தி தின்கிறது பறவை
முதலை தரும் அனுமதி
நமது ஓட்டுரிமை
பறவையின் தேவை வேறு
முதலைக்குத் தேவை வேறு
Friday, April 10, 2026
விசும்பல்
காற்றின் திசையில்
முரண்டு பிடித்தபடி
இருக்கி கட்டி அணைத்து
திரியை பிரிய மறுக்கிறது
தீபம்
தீபம் நமதன்பு
காற்று நமதுறவு ...
Saturday, March 14, 2026
உன்மை
இந்த உலகில்
அதிகமாக சொல்லப்படும்
பொய்களில் சில
"நன்றாக இருக்கிறேன்"
"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"
"நான் இருக்கிறேன்"
சில நேரம்
பொய்கள் தான் நம்மை
உண்மையாகவே வாழ வைக்கிறது ...
Subscribe to:
Posts (Atom)






