Friday, April 17, 2026

ஓட்டுரிமை

 


முதலையின் பற்களின் இடுக்குகளில்

மாமிசம் கொத்தி தின்கிறது பறவை

முதலை தரும் அனுமதி

நமது ஓட்டுரிமை

பறவையின் தேவை வேறு

முதலைக்குத் தேவை வேறு

Friday, April 10, 2026

விசும்பல்



காற்றின் திசையில் 

முரண்டு பிடித்தபடி 

இருக்கி கட்டி அணைத்து 

திரியை பிரிய மறுக்கிறது

தீபம் 


தீபம் நமதன்பு

காற்று நமதுறவு ...

Saturday, March 14, 2026

உன்மை

 


இந்த உலகில்

அதிகமாக சொல்லப்படும்

பொய்களில் சில


"நன்றாக இருக்கிறேன்"

"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"

"நான் இருக்கிறேன்"


சில நேரம் 

பொய்கள் தான் நம்மை 

உண்மையாகவே வாழ வைக்கிறது ...