பல எழுத்துக்கள் இங்கே
படிக்க யாருமற்று கிடக்கிறது ,
பிறந்த குழந்தையை,
தூக்கி சீராட்ட யாருமின்றி
அனாதையாக இருப்பது போல் ..
காக்கை கூட்டில் முட்டை இட்டு
செல்லும் குயில்களாக ,
எழுத்தாளர்கள் எழுத்துக்களை
வலைகூட்டிலும்
புத்தககூட்டிலும்
அனாதையாய்
விட்டுவிட்டு போகிறார்கள் ..
தெருவில் விடப்பட்ட அழாத குழந்தையை
கண்டும் காணாமல் போவது போல் ,
பல நேரம்
அனாதை எழுத்துக்களை யாரும் கவனிப்பதில்லை ..
அனாதை எழுத்துகளுக்கு
ஆதரவு அளித்து
வாழ்வளிப்பதும்
நெஞ்சில் தஞ்சம் அளிப்பதும்
வாசகர்களே ...
அனாதை எழுத்துக்களின்
வாழ்வும் ,
அனாதை குழந்தைகளின்
வாழ்வும் ஒன்றாகவே
இருக்கிறது ..
தன்னை ஏற்றுக் கொண்ட
நெஞ்சங்கள் அளவை பொறுத்தே
அவற்றின் வாழ்வும்
பிரகாசிக்கிறது ..
13 comments:
தலைப்பு நல்லாருக்கு! கவிதையும் தான் :)
அருமை அருமை
மாறுபட்ட அருமையான சிந்தனை
அழகான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
என்ன சொல்றதுன்னு தெரியலீங்க, வித்தியாசமா முயற்சி செய்து இருக்கீங்க..
//எழுத்தாளர்கள் அனைவரும்
குயில்களே ...
காக்கை கூட்டில் முட்டையிட்டு
செல்லும் குயில்கலாகவே ,
அவர்கள் எழுத்துக்கள் யாவும்
வலைகூட்டிலும்
புத்தககூட்டிலும்
அனாதையாய்
விட்டுவிட்டு செல்லப்படுகிறது //
ரொம்பவே ரசித்தேன் உங்களின் இந்த கவிதையை ..மிக மிக வித்தியாசமான கருப்பொருள் ...மனமார்ந்த வாழ்த்துகள்
உண்மையிலேயே ரசிக்க வைத்த கவிதை. இந்த கவிதை அனாதை இல்லாமல் எல்லா நெஞ்சங்களிலும் பிரகாசிக்கும். வாழ்த்துக்கள்.
இப்படி மாருபட்டு எழுதினால் அனாதையாகது நமது எழுத்துகள் என்பது மறுக்கப்டாத உண்மை
@கிருபாகரன்...
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@Ramani ...
தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@suryajeeva ..
தங்கள் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@பூங்குழலி s.,,,
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@Avargal Unmaigal.,,,
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
mmmmmmmmm nalla kavithai..unmaijana varikal..
.தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment