Thursday, October 17, 2013

தனிமை ...










வார்த்தைகளைக் கூட
தனது துணையாய்ப் பயன்படுத்த முடியாத
சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ...

இறவா
விடியற் பொழுதில்
கொக்கரிக்கும்
ஊமைச் சேவலாய்
இந்தத் தனிமையும் கொக்கரித்துப் போகிறது ..

தனது
கால்தடங்கள் தெரியாவண்ணம் இருக்க
வந்த வழிநெடுக
புன்னகை சிந்தி
அழித்துப் போகிறது ...

உடைந்து போன
கண்ணாடியின் பின்பங்களை
ஒன்றுசேர்க்க முடியாமல்
அந்தச் சிதறிப்போன கண்ணாடியிலேயே
தன முகம் பார்த்துக்
வெறுமையில் சிரிகிறது தனிமை ...

சிறைபட்ட பூவிலிருந்து தப்பித்து
காற்றோடு போய்
கரைந்து
மறைந்து
தொலைந்து போன தன்னைத் தானே தேடும்
வாசம் போல
தன்னைத் தேடுகிறதிந்தத் தனிமை ....

பாலைவனத்தில்
ஒற்றையாய் நிற்கும்
பட்டுப்போன மரத்தில்
தேன் குடிக்கக் காத்திருக்கும்
வண்ணத்துபூச்சிக்கு
தனிமை சொல்லும்
உண்மை புரிவதில்லை ..

தனது தனிமையை
போக்கத் துணையாக
மீண்டுமொரு தனிமையிடமே
சரணடைந்து
தனிமையில் வாடுகிறது தனிமை ...

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்த விதம் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

தனிமைக்கு காவியமே படைத்துவிட்டீர்கள் நண்பரே...

Yaathoramani.blogspot.com said...

பாலைவனத்தில்
ஒற்றையாய் நிற்கும்
பட்டுப்போன மரத்தில்
தேன் குடிக்க காத்திருக்கும்
வண்ணத்துபூச்சிக்கு
தனிமை சொல்லும்
உண்மை புரிவதில்லை ..

தனிமையின் அவலம்
குறித்த கவிதை அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
//


Thooral said...

@திண்டுக்கல் தனபாலன் .... வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@மகேந்திரன்....
வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி

Thooral said...

@Ramani...
வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி