சில நினைவுகள் மட்டும்
வேண்டாதவையாக
தீண்டாதவையாக
இருந்தும்
அடிக்கடி
வந்து போகிறது
சுகமாக ..
சில
சொல்வதுமில்லை
வெல்வதுமில்லை
ஆனாலும்
மனதை விட்டு
விலகுவதுமில்லை ..
சில
பார்வையிலே
புன்னகை கோர்வையிலே
மட்டும் இருந்திருக்கும் ..
ஆயினும்
கண்மூடும் வரை
உள்ளிருக்கும் ..
காரணமில்லை
காரியமில்லை
பருவத்தில்
உருவான புயலால்
உண்டான சேதத்தின்
மிச்சம்..
தனிமையில்
விழிக்கும்
இரவினில்
முழிக்கும்
கனவினில்
ரசிக்கும் ..
முதற்பதியம்
போட்ட நிலமாய்
அதன் பயிராய்
அதன் நினைவுகள்
பசுமையாய் ..
இறுதியாய்
கண்மூடும் போது
இது தூங்கும் ..
வாழ்கை முழுதும்
இதன் பாரம் தாங்கும் ..
தாய்க்கு
தலைமகனாய்
இந்த நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் ..
2 comments:
அருமை
சிலருக்குள் மட்டும் அந்த நினைவுகள்
விதையாய் பின் தொடர்ந்து வளர்ந்து
அற்புத கவிதை விருட்சமாய்...
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்
@ramani
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)
Post a Comment