Friday, August 31, 2012

மனிதன் மறந்த மனித நேயம் ....!







மனம்
மனிதனிடம்
இருக்கும் வரை தான்
அவன் மனிதன்..
அவன் மனம்
பணத்தோடு சென்றால்
அவன் பிணம் ...

கோயில் கருவறையில்
கடவுளுக்கும் மனிதனுக்கும்
இடைவெளியை
பணம் தீர்மானிக்கையில்
மனிதனும்
பணத்தோடு போனான்..
பிணமாகிப் போனான் ..

அதனால்
நேசம் விசமாகிபோனது
பாசம் வேஷமாகிபோனது ..

வெறிபிடித்த மிருகமாக
சக மனிதனைத் துரத்துகிறான்..
அவன் வலியில்
வேதனையில்
ருசி கண்டு
முழு வயிறு அருந்துகிறான்..

பிறரின் கண்ணீர் மழையில்
நீச்சலடிக்க
துடிக்கிறான்...

இன வெறியில்
போர் என்ற பெயரில்
உயிர்களை வேட்டை ஆடுகிறான் ..
பணவெறியில்
அரசியல் வாதியாய்
நாட்டை ஆள்கிறான் ..
நாட்டின் வியாதி ஆகிறான்..

உயிர் மரியாதை
இழந்தது ..
மரியாதையை
தன் உயிர் இழந்தது ...

சத்தியம் கூட
இன்று
பொய்யாகிபோனது
சத்தியமாக ...!

மனதில்
இரக்கம்
இறங்கிப்போனது ..
பணக் கிறுக்கும்
ஏறிப்போனது ..

தெருவில்
பயங்கி கிடக்கும்
முதியவரை
கடந்து செல்லும் போது
மட்டும் குருடன் ஆனதால் ,
மனிதநேயமும்
இறந்து போனது ..

காம இசையிடம்
பிச்சைகேட்டு
பந்தம்
சொந்தம்
மறந்ததால்
மனித நேயமும்
மறந்து போனது..

மனிதனுக்குள்ளே
உயர்திணை அழித்து
அஃறினை வளர்த்ததால்
மனிதநேயம்
மறைந்து போனது..

கல் கண்டான்
சிலைவடித்தான்
கோயில் கொண்டான்
கடவுள் என்றான்,
ஆனால்
பக்தியை தொலைத்தான்...
மனிதநேயமும்
தொலைந்து போனது ..

தன் இனம்
அழித்து
அதன் வெற்றியில்
திளைத்ததால்
மனிதநேயமும் அழிந்து போனது..

பணம் பத்தும் செய்ய
மனித நேயமும்
பத்தோடு பதினொன்றானது..
பணத்திற்கு
இரையானது,
மனிதன் மறந்து போன
மனிதநேயம்..

2 comments:

அழகப்பன் இராமநாதன் said...

"கோயில் கருவறையில்
கடவுளுக்கும் மனிதனுக்கும்
இடைவெளியை
பணம் தீர்மானிக்கையில்
மனிதனும்
பணத்தோடு போனான்..
பிணமாகி போனான் .."
அருமையான வரிகள், ஆழமான சிந்தனை, மிக்க நன்று.... மனிதனின் பிழையை பதிவுசெய்யும் பொழுது அச்சு பிழையும் கூட ஒட்டிகொண்டது என்று நினைக்கிறன்.... "பயங்கி கிடக்கும்" என்பது "மயங்கி கிடக்கும்" என்று திருத்தப்பட வேண்டும். உங்களின் கவிதை பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.

v.c.cyril said...
This comment has been removed by the author.