Sunday, August 26, 2012

கருணைக்கு கவிதாஞ்சலி ..





கருணைக்கு வடிவம் உண்டா ?
உண்டு ..
இந்த
புனிதர்கள் வாழ்ந்த
பாரத நாட்டில்,
கருணைக்கு வடிவம் உண்டு ...!
அஃது அன்னையின்
வடிவில் உண்டு ..!


அவள்
குட்டி வட்டத்துக்குள்
தான் குழந்தையென
ஒட்டிக்கொள்ளும்
அன்னையல்ல ...
அவள்
அரசியல் பேசும்
அன்னையல்ல ..
அவள்
ஆதரவு அற்றவர்களுக்காக
அரிசியல் பேசிய
அன்னை ..

அனாதைகளின்
தனிமையை
தனியாய் நின்று
போக்கியவள் ..
வங்ககரையோரம்
கங்கைக் கரையோரம்
அனாதைகளின்
புதிய புண்ணிய ஷேத்திரம்
உருவாக்கியவள்..

கடவுள் அனுப்பிய
தேவதை அவள் ..
ஆனால்,
ஆதரவு அற்றவர்களின்
கடவுள் அவள் ..

தாய்வீடு யுகோஸ்லாவியாவை விட்டு ,
ஏழைகளை நேசித்து
அன்பை யாசித்து
கடவுளை மனதால் மணந்து ,
பாரதத் தேசம் புகுந்தவள் ..
மக்கள் சேவையில்
தேவனைக் கண்டவள் ..

தீண்டாமை நோயாம்
தொழுநோயை
தொட்டுப் பார்த்து
மருத்துவம் செய்தவள் ...

கருவறையில்
தன் தனிமையை
உணர்ந்ததால் என்னவோ ,
ஆதரவற்றவர்களுக்கு
அடைக்களம் ஆனவள் ..

அனாதை என்ற
வார்த்தையை
அனாதையாக்க
முயன்றவள் ..

மணம் கொண்டு இருந்தால்
தன் குழந்தைக்கு மட்டும் தாயாக
இருந்து இருப்பாள் ,
கருணை மனம்
கொண்டதால்
உலகிற்கே தாய் ஆனாள்..


பெயர்ச் சொல்ல
தேவை இல்லை
அவள் யாரென்று சொல்ல ..
கருணையின் பிறந்தநாளுக்கு
சிறு கவிதாஞ்சலி ...

No comments: