கடவுள் மனிதனைப் படைத்தார் ,
மனிதனும் பல கடவுள்களைப் படைத்தான் ..
கடவுள் மனிதம் இல்லா மனங்களில் பேயைக் கண்டார் ,
மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயைக் கண்டான் ..
கடவுள் மனிதன் மனதை கல்லாய்க் கண்டார் ,
மனிதன் கடவுளை கல்லில் கண்டான் ..
கடவுள் இதிகாசங்களில் மனிதன் ஆனார் ,
மனிதன் சில தருணங்களில் கடவுள் ஆனான் ..
கடவுளும் பூமியில் மனிதனை தேடுகிறார் ,
மனிதனும் கடவுளைத் தேடி அலைகிறான் ..
இறுதியில் ,
கடவுளும் பல நேரம் கடவுளாக இல்லை
மனிதனும் பல நேரம் மனிதனாக இல்லை ..
10 comments:
முரண்பாட்டு மூட்டைகளை அழகா சொல்லியிருகீங்க நண்பரே..
கடவுளும் இருக்கிறார், மனிதனும் இருக்கிறான். ஆனால் மனிதமும் கடவுளின் ஆசிர்வாதமும் இல்லை. நல்ல அற்புதமான கவிதை.
இரண்டு நிலைகளின் முரண்களை மிக அழகாக
விளக்கிப்போகும் தங்கள் படைப்பு அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
மனிதன் மனித தன்மையுடன் வாழும் பொழுது கடவுளாகிறான்.. மனித தன்மை இல்லாதவன் வேறெங்கோ கடவுள் இருப்பதாய் சுட்டிக் காட்டுகிறான்
நான் நாமாக மட்டுமே இருக்கிறோம்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
எனக்கென்றால் நம்பிக்கையில்லை.கடவுள் படைத்த மனிதன் வேறு.இப்போ மனிதன் வேறு.அதுதான் கடவுளின் கண்களுக்குக் கிட்டாமல் இருக்கிறான் !
''..மனிதன்
மனிதனாகவே இருக்கிறான்..''
மனிதன் மனிதனாக. இல்லையே
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மனிதன் மனிதாகவேஇருக்கிறான்.மனித காரியம்தானே எல்லாம் இயற்கையை சீர்செய்வது உட்பட/
நல்ல படைப்பு,
வாழ்த்துக்கள்.
அருமை தோழா...
ஒற்றுமை என்னவென்றால் என் வலைதளத்தின் தலைப்பு "மனிதம்".
@all...
கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி
Post a Comment