சிறகின்றிப் பறக்கும்
உயிரின்றித் துடிக்கும்
காற்றைச் சுவாசிக்கும்
அதைச் சுவாசிக்கும் வரை
நிலைக்கும் ..
எப்போதும் உயர வேண்டும் என
நினைக்கும் ..
தன் நம்பிக்கை
நூல் கொண்டு
திசை நோக்கி
குறிக்கோளோடு
பறக்கும் ..
மது அருந்தாமலேயே
தள்ளாடியபடியே
தனியே நிற்கும் ..
மனிதன் கையில்
இருப்பதால் என்னவோ
போட்டி வந்துவிட்டால்
அடுத்தவனை அறுக்கும் ..
பறவையும் போட்டி போடும்
உன்னைப் பார்த்து ..
ஒற்றைக்காலில்
காற்றின் மெல்லிய
இசைக்கு நாட்டியமாடும்..
உண்மையில்
நான் படிக்காமல்
வாங்கிய பட்டம் நீ ..
2 comments:
முதாலவது பந்தி அருமையா வந்திருக்கு ஜெயராம்!
@ஹேமா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
Post a Comment