Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!






ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...

பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் 
பரவசம் 
வெட்கம் 
தயக்கம் 
வியப்பு  சந்திப்பு ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு 
சிரிப்பு 
மகிழ்ச்சி 
ஆறுதல் 
ஆசை  ...

ஒவ்வொரு ஆசையிலும்  ,
மோகம் 
தாகம் 
காமம் தணியாத காதல்  ...

ஒவ்வொரு காதலிலும்  ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு 
பயம்
ஊடல்  ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் 
சோகம் 
திகைப்பு 
மோதல் கூடல்  ...

ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
 மகிழ் மிகு கண்ணீர் முன்னம்  விட
அதிகக் காதல்  ..

இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி 
திகைப்பு 
காயம் 
தனிமை  ...

தனிமையில்,
சிரிப்பு 
சோகம் 
வலி  மிகு கண்ணீர் 
வெறுமை  நினைவுகள் ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள்  ...!

4 comments:

ஹேமா said...

அப்பாடி....நீங்கள் சொன்னபிறகுதான் யோசிக்கிறேன்.ஒரே பார்வைதான்.எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்.எரித்துக்கூட விடுகிறோமே சிலசமயங்களில்.அருமையா வந்திருக்கு கவிதை ஜெயராம் !

Anonymous said...

"ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும்"- இவ்வளவு தந்ததா?
அருமை...

Yaathoramani.blogspot.com said...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள் தருகிறது ...!


ஒரே ஒரு பதிவுதான்
அது படிப்பவர் மனதில்தான்
எத்தனை ஜாலம் புரிகிறது .
நீங்கள் சொல்லிப் போகும்
அந்த ஒரே ஒரு பார்வைபோல
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Thooral said...

@all...
கருத்து தெரிவித்த அனைத்து
நெஞ்சங்களுக்கும் நன்றி :)