Tuesday, April 10, 2012

எனக்கான கனவுகள் எனக்கு வந்ததே இல்லை ...!





எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...
என்னைச் சுற்றி இருப்பவர்கள்
எனக்கான கனவுகள் காண்கிறார்களாம்..
சொல்கிறார்கள் ..



எனக்கான கனவுகள்
என்னில் வருவதற்காக
இன்று வரை காத்திருகிறேன்..


ஆசைகள் இருந்தும்
கனவுகள் வருவதில்லை ..
தங்கக் கூண்டுக்குள்
சிறைப்பட்ட குயில் எப்படிச் சந்தோசமாய்ப் பாடும் ..

என்ன வேடிக்கை இது ?
அவர்கள் மற்றவர் கனவுகளைச் சுமந்ததர்காக
என்னை அவர்கள் கனவுகளைச் சுமக்க சொல்கிறார்கள் ..

எனக்கான எனது கனவுகள்
இன்று வரை
எனது மனதின் அடியில்
சிறைபட்டு விடுதலைக்காக
காத்திருகிறது ...

எனது கனவை
அடுத்தவர் தோளில்
சுமத்தி வைக்க நான் விரும்பவில்லை ..
எனது கனவை
அவர்களில் நான் காண விரும்பவில்லை ..

எனது தூக்கத்தில் கூட
உள்ளுக்குள் தூங்கிக்கிடக்கும்
எனது கனவு விழித்துக்கொள்ள
பயப்படுகிறது ...
அதனால் ,
எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...