வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..
நீ பிறக்கையில்
உனது
அழுகைக்குப் பிறக்கிறது
எங்கள் சிரிப்பு ..
பூவாசம்
தோற்றுபோகும்
உந்தன்
பால்வாசத்திடம்..
எம் மொழியும்
ஓர் மொழிதான்
உன் வாய்மொழியில்
அது மழலைச் சொல்மொழி ..
எப்போதும்
உன் வாய்வழியே
வழியும்
ஓர் அழகியே
நீல்வீழ்ச்சி ..
உன்னோடு
கண்ணாமூச்சி
விளையாடுகையில்
எங்கள் சோகமும்
ஒளிந்து மறைகிறது ..
பருப்புக் கடைந்து
விளையாடுகையில்
உண்ணாமல்
வயுறு நிரம்புகிறது ..
நீ சிரிக்கையில்
அது மாறுகிறது
புது ராகம் ..
நீ தத்தித் தடுமாறி
நடக்கையில்
அது நடனமாய் ..
ஓடி விளையாடுகையில்
அழகு
ராட்டினமாய் ...
வானில் தவழும்
நிலவாய்
பூமியில் நீ
உலவுவாய் ..