காற்றின்
துணைகொண்டு
காலப் பருவத்தின்
வழியே
மேகத்திடம் இருந்து
தப்பித்து வருகிறது
மழைத்துளி ..
வந்த
மழைத்துளி
பிடித்ததால்
தன்னில்
ஒளித்து வைத்துவிடுகிறது
பூமி ..
மழைத்துளிக்கு
பிடித்திருந்ததால்
தங்கிவிடுகிறது
புல்வெளியில் ..
தன்னிடமிருந்து
தப்பித்துவந்த
வந்த மழைத்துளியை
சூரியன் துணைகொண்டு
மீண்டும்
சிறைபிடித்துச் செல்கிறது ..
மேகம் ..