Monday, January 20, 2014

குழந்தையின் ஒற்றைச் செருப்பு







சாலையின் நடுவில் விடப்பட்ட
குழந்தையின் ஒற்றைச் செருப்பு
தனித்து
தனிமையில்
தவித்துக் கிடக்கிறது ...

பிஞ்சு பாதங்களை
கடிக்க மனமின்றி
விழுந்து தற்கொலை
செய்து கொண்டதா ?
இல்லை
பிஞ்சு பாதங்களின்
வாஞ்சையில் மயங்கி
விழுந்ததா ?

Saturday, January 11, 2014

காய்ச்சல்








காய்ச்சல் ,
அது ஒரு அழகிய
அனுபவம் ..

குளிரில்
கொதிக்கும் உலோகம்
இந்தத் தேகம் காய்ச்சலில் ..

போர்வைக்குள் குடியிருப்பு
காற்றைக் கண்டால் வெறுப்பு ..

போர்வைக்கும் வியர்க்கும்
அனலாய் உடல் கொதிக்கும் ..

எப்போதும் குளிரில் நடுக்கம்
கண்மூடி பல பிரச்சனை மறக்கும்
நோயோடு மட்டும் உறக்கம் ..

நுண்ணுயிர்கள் உடலுக்குள்
கபடி ஆடும் ..
மருந்து மாத்திரை
அதை எதிர்த்து விளையாடும் ...

நோயுற்ற போது
தாய் வந்து நெற்றியில்
கைவைக்கும் போது
மீண்டும் குழந்தையாகலாம் ..

தாய் வந்து ஊட்டும்
ரசம் சோற்றுக்காக
எத்தனை முறையும்
நோயோடு உறவாடலாம் ..

இப்போது சொல்லுங்கள்
காய்ச்சல் ஒரு அழகிய
அனுபவம் தானே ..