Saturday, March 29, 2025

காலமும் காதலும்

 


கண்களுக்குள் சிறைப்பட்டு வாழும்
யாரும் பார்க்காத கண்நீர்த்துளியை போல
நாம் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில்
காலமும் காதலும் சிக்கிக் கிடக்கிறது
அதைப் பார்த்த நொடியில்
காலம் விடுதலையாகிறது

மறந்துபோன கல்லறை மேட்டின் மேல் கட்டப்பட்ட
யாரும் வாழாத புதிய வீட்டில் உறங்கும் பூனையைப் போல
நாம் பேசிய உரையாடல்கள் புதைந்திருக்கும் கைபேசியில்
காலமும் காதலும் உறங்கிக் கிடக்கிறது
அதைப் படித்த நொடியில்
காலம் விழித்துக் கொள்கிறது

கடலில் இருக்கும் மீன் மழையில் நனையும் ஆசையில்
மேலே குதிக்கும் பொழுதினில்
அலை மேலெழும்பி மீண்டும் கடலுள் இழுத்துச் செல்லப் பார்க்கும்
காதலில் காலம் அப்படியே