அந்தக் காட்சி ,
கடந்து போன ஒரு நொடியில்
என் இமை பிடித்து நிறுத்தி விட்டது ..
பதியம் போட்ட நெல்மணியாய்
நெஞ்சில் பதிந்து விட்டது ..
அந்த அழகை
என்ன வென்று சொல்ல ...
அழகுக்கு உவமைச் சொல்லும்
அழகு அது ..
எந்தக் கல் நெஞ்சும்
அதைக் கண்டால்
இலகும் அதில் ..
என் விழிக்குள் இருக்கும்
கருமணிகளும் சிறு குழந்தையென
துள்ளி விளையாடியது
அந்த அழகை ரசிக்கையில் ...
கருப்புக் கல் பதிந்த வெள்ளி
மோதிரமாய்க் கண்கள் ..!
பூவின் புன்முறுவலாய்
மெல்லிய சிர்ரிப்பு ...!
காற்றின் சொல் கேட்கும்
பூவாய்த் தலை யாட்டு ..!
கோபம் காட்டிச் சிவக்கும்
அழகிய மூக்கு ..!
பூச்சூடும் பூவாய்
அவள் அணிந்தப் பூ ..!
காற்றில் ஓவியம்
வரையும் அழகிய விரல்கள் ...!
சிரிப்பாய் இசைத்து வரும்
காம்போதி ராகம் ..!
இப்படி
இமைக்க மறந்த விழிகள்
அனைத்தையும் மறந்தன
அந்தக் குழந்தையின் புன்சிரிப்பை
ரசிக்கையில் ...!
5 comments:
ஆ,,,மன்ம் ரசித்த கவிதை குழந்தையின் செயல்கள் எப்போதுமே மனம் பறிப்பவையாக/
கவிதைக்கு ஒரு கவிதை.அழகோ அழகு !
குழந்தையில் சிரிப்பில் அழகைக்கண்டு உங்கள் கவிதையில் மொழிந்த அழகு சிறப்பு
ரசித்தேன் வாழ்த்துக்கள்
//என் விழிக்குள் இருக்கும்
கருமணிகளும் சிறு குழந்தையென
துள்ளி விளையாடியது
அந்த அழகை ரசிக்கையில்//
கண்ணின் கருமணிகள் அங்கும் இங்கும்
நகர்வதை சொன்னவிதம் அருமை!
சா இராமாநுசம்
பதியம் போட்ட நெல்மணியாய்
நெஞ்சில் பதிந்து விட்டது ..//
மிக மிக நேர்த்தியான வர்ணனை
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment