Sunday, May 20, 2012

வாசம்..!





பால் வைத்த
புது நெல்மணியின்
அழகிய வாசம் ...!

பால் குடி மறவா
பிள்ளையின்
தூய்மையான பால் வாசம் ..!

மழைமண்ணில் இட்ட முத்தத்தில்
பூமிப்பெண்ணின் 
நாணமாக வரும் மண் வாசம் ..!

கிராமத்தவர்கள்
பேச்சில் வீசும்மண் வாசம் ..!

கோவில் கருவறையுள்
இருக்கும் தெய்வீக வாசம்..!

தாயின் கருவறையில்
நாம் உணராத தெய்வீக வாசம்..!

பூந்தோட்டத்தில்
காற்றோடு கை கோர்த்து
வரும் மகரந்த வாசம் ..!

சவ ஊர்வலத்தில் சவமாகிப்போகும்
தூவப்படும் பூக்களின் வாசம் ..!

நேர்மையாய்
வியர்வையாய்
உழைக்கும்
உழைப்பாளியின் வியர்வையின் வாசம் ..!

போலியாய்குளிர் அறையில்
ஏமாற்றிப் பிழைக்கும்
வஞ்சகர்கள் மேல் வரும்
அத்தரின் வாசம் ..!

கட்டிலில் பூக்கள்
ஆசை தந்து
பத்து மாதம் களித்து
ஓசைதரும்
மோகத்தின் வாசம் ..!

இறந்தவர் உடலில் பூக்கள்
உலகின் நிலையாமையை
எடுத்துச் சொல்லும்
மரணத்தின் வாசம் ..!

இவற்றில் எது காட்டுகிறது
வாசத்தின் உண்மையான வாசம் .. ?

No comments: