Thursday, June 28, 2012

புரிதல்..!




பொம்மைகளின் பேச்சு எனக்குப் புரிவதில்லை ..
குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.
அதனுடன் பேசுகிறார்கள்,
சாதம் ஊட்டுகிறார்கள்,
விளையாடுகிறார்கள் ...
நானும் பொம்மையின் பேச்சை புரிந்துகொள்ள
முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்றுப் போகிறேன் ...
பொம்மைகளின் பேச்சைக் கேட்க
குழந்தையாய் மாறி கேட்டுப் பார்த்தேன்
அப்போதும் புரியவில்லை ..
குழந்தைகள் பொம்மையுடன்
விளையாடும் போது உற்றுக் கவனித்தேன்,
அப்பொழுது ஒர் உண்மை விளங்கியது..
குழந்தைகள் பொம்மையுடன் பேசும் பொழுது
பொம்மையாக மாறுகிறார்கள் பேசுகிறார்கள்..
நான் மனிதனாக இருந்து
பொம்மைகளின் பேச்சைக் கேட்க முயற்சிகிறேன் தோற்கிறேன்..

4 comments:

ஆத்மா said...

உண்மைதான்...
ஒரு விடயத்தில் எமக்கு தெளிவு தேவையெனில் அவ்விடயமாகவே நாம் மாற வேண்டும்...:)

தொடருங்கள் கவிதை அருமையாகவுள்ளது

Thooral said...

@சிட்டுக்குருவி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

Yaathoramani.blogspot.com said...

குழந்தைகள் பொம்மையுடன் பேசும் பொழுது
பொம்மையாக மாறுகிறார்கள் பேசுகிறார்கள்..
நான் மனிதனாக இருந்து
பொம்மைகளின் பேச்சை கேட்க முயற்சிகிறேன் தோற்கிறேன்..//

மிக மிக அருமை
நீங்கள் சொல்வதுமிகச் சரி
நாம் பொம்மையாக் மாறினால்தானே
பொம்மை நம்மை ஏற்றுக் கொள்ளும் ?
மனம் கவர்ந்த் கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Thooral said...

@Ramani..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...