Monday, September 3, 2012

தோல்விகளும் பிடிக்கும் ..!






காற்றோடு
குடை கொண்டு
நான் போடும் சண்டையில்
தோற்றுப்போய் மழையில்
நனைகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

குழந்தைகளோடு
விளையாடுகையில்
நான் தோற்றுபோக
குழந்தைகள் சிரிக்கையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சண்டையிட்ட
காதலியிடம்
தோற்றுபோய்
மன்னிப்புக்கேட்க
அவள் பொய்யாகக் கோபப்படுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

மறக்க நினைத்ததை
மீண்டும் மீண்டும் நினைத்து
நினைவுகளிடம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சில உறவுகளை
மெய்பிக்க
பொய்யாக நாம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

வெற்றியின்
படிக்கட்டுகளாக
தோல்விகள் மாறுகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

2 comments:

Unknown said...

wow wonderful kavithai keep going yaar,

Thooral said...

.தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி