Wednesday, September 19, 2012

தேடல் ..!





யாரையோ
தேடிக் கொண்டு
பூமியெங்கும்
அலைகிறது
காற்று..

யாரையோ
தேடிக்கொண்டு
சூரியனை
சுற்றிவருகிறது
பூமி..

இவர்கள்
இருவரின்
தேடலின்
இடைவெளியில் தான்
ஓடுகிறதோ
நமது தேடல் ...?

5 comments:

Unknown said...

நல்ல சிந்தனை முத்துக் கவிதை!

Anonymous said...

வாவ் ! மிக அருமையான ஒரு கவிதை சகோ... சுற்றுவதும், தேடுவதும் தான் மனித குணமல்லவா ?

Thooral said...

ஐயா..தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி..

Thooral said...

.தங்கள் முதல் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி..

Yaathoramani.blogspot.com said...

அருமையான வித்தியாசமான
சிந்திக்கத் தூண்டும்படியான கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்