பிரிவு ..
கூட்டத்தில்
தனிமையாக்கும்
நினைவுகளில்
நனைய வைக்கும் ..
தனிமையில்
கரையவைக்கும் ..
மெழுகுவத்தி போல் ,
பிறருக்காகத் தனியே அழவைக்கும் ..
காற்றால் மரங்களில்
இருந்து பிரித்துச் செல்லப் பட்ட இல்லை போல
திசை தெரியாமல் அலைய வைக்கும் ...
சில நேரம்
காற்று தூக்கிச் செல்லும் விதைப் போல
புதிதாக உன்னை முளைக்க வைக்கும் ..
உளிகள் பிரித்த பாறையென புதிய சிலையாக வடிவம் கொடுக்கும் ..
மறக்காதே
தாயின் கருவறை
பிரியாமல்
உலகம் இல்லை...
வீட்டை பிரியாமல்
கல்வி இல்லை..
மேகத்தைப் பிரியாமல்
மழை இல்லை..
இமைகள் பிரியாமல்
பார்வை இல்லை..
உதடு பிரியாமல்
வார்த்தை இல்லை..
பூவின் இதழ்கள்
பிரியாமல் வாசம் இல்லை ..
துன்பம் பிரியாமல்
இன்பம் இல்லை..
பிரிவு இல்லாமல்
உறவில் வலிமை இல்லை..
நம்மைப் பிரிந்து போகாத
பிரிவு என்று எதுவும் இல்லை ..!