Wednesday, December 25, 2013

காத்திருப்பேன் என் கண்ணீருடன் ...!






தினமும் உன்னைத் தேடி ,
நீ தரும் செல்வத்தை நாடி ..
உயிரை பணயம் வைத்து
படகில் பயணம் வைத்து வருவோம் ,
உன்னிடம் பிச்சை கொண்டு திரும்புவோம் ..

தினமும் எனை மட்டும் பார்த்தது ,
எனக்குத் தந்த செல்வம் போதாது
என என்னைக் காண வந்தாயே
என்னைக் காத்துவந்த தாயே ..

நீ தாய் தான் ,
தெய்வத்தாய் தான் ,
அதனால் தான்
என் வீட்டை காண வந்தாயோ ?
என் பிள்ளைகள் பிடித்துப்போய்
என் குடும்பத்தையும் உடன் கொண்டு சென்றாயோ ?
எப்போது என் குடும்பத்தைத் திரும்பி அனுப்புவாய் ?

அனுப்பும் வரை இங்கே காத்திருப்பேன்
என் கண்ணீருடன் ...!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!






 

சிலுவையில் அறையப்பட்ட
தேவனிடத்திலிருந்து சிதறிய குருதியால் 
பாவம் கழுவிய
எங்கள் பாவத்தை எங்கே போய்க் கழுவ ..

தேவாலயத்தில்
மெழுகுவர்த்தியை  அழ வைத்து
கேட்ட மன்னிப்புக்கு
எங்கே சென்று மன்னிப்பு கேட்க ...

பிறரின் பாவங்களுக்கு ,
மனமுவந்து சிலுவை ஏற்கும்
ஒவ்வொருவரும் தேவன் மகனே ..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..   

Friday, December 13, 2013

இது மயிரைப்பற்றி ...!

மயிர் ,
அது கெட்ட வார்த்தையல்ல ...
என்றோ யாரோ
ஒருவருடைய கோபத்தில்
விளைந்த வன்மத்தால் ,
தீந்தமிழ் சொல்
தீய சொல்லானது ..

மயிர் ,
ஆண்டவன் விளையாட்டாய்
தலையில் விளைவித்த
உயிரற்ற பயிர் ..

பெண்களிடன் சிறிதாய் இருந்தால்
அவள் சிறுக்கி
ஆண்களிடம் அதிகமாய் இருந்தால்
அவன் பொறுக்கி

நம் தலையில் நின்று
நம் பேச்சைக் கேட்காமல்
எங்கிருந்தோ வந்த காற்றின்
பேச்சைக் கேட்கும் ,
சில உறவுகள் போல..

பேன் போன்ற
சிறு உயிர்கள் வாழும்
சிறு கருங்காடு ..

இயற்கை மனிதனுக்கு
முதலில் அணிவித்த
மேலாடை ..

மனிதனின் உண்மை வயதைக்
கண்ணாடி முன் காட்டும்
உண்மைக் கண்ணாடி நீ ..

கருப்பு அழகானது
உன்னிடம் தான் ..
வேண்டுதலுக்குக் கடவுளை
ஏமாற்றுவது
உனைக் கொடுத்துத் தான் ...

பாண்டியன் சந்தேகத்தை
ஆண்டவன் தீர்த்த விளையாட்டின்
கரு நீ ...
இளமையின் உண்மை உரு நீ ..

உண்மையில் நம் தலையில் வைத்து
ஆடுவது மயிரை தான் ..

Sunday, December 1, 2013

நிலவின் கேள்வி ..!




என் வீட்டு ஜன்னல்
வழி வந்து பார்க்கும் நிலவு
என்னைப்பார்த்துக் கேட்கிறது
ஏன் உள்ளே சிறைப் பட்டாய் என ?