Friday, December 13, 2013

இது மயிரைப்பற்றி ...!





மயிர் ,
அது கெட்ட வார்த்தையல்ல ...
என்றோ
யாரோ
ஒருவருடைய கோபத்தில்
விளைந்த வன்மத்தால் ,
தீந்தமிழ் சொல்
தீய சொல்லானது ..


மயிர் ,
ஆண்டவன் விளையாட்டாய்
தலையில் விளைவித்த
உயிரற்ற பயிர் ..

ஆண்களிடம் அதிகமாய் இருந்தால்
அவன் பொறுக்கி

பெண்களிடன் சிறிதாய் இருந்தால்
அவள் சிறுக்கி

நம் தலையில் நின்று
நம் பேச்சைக் கேட்காமல்
எங்கிருந்தோ வந்த காற்றின்
பேச்சைக் கேட்கும் ,
சில உறவுகள் போல..

பேன் போன்ற
சிறு உயிர்கள் வாழும்
சிறு கருங்காடு ..

இயற்கை மனிதனுக்கு
முதலில் அணிவித்த
மேலாடை ..

மனிதனின் உண்மை வயதை
கண்ணாடி முன் காட்டும்
உண்மைக் கண்ணாடி நீ ..

கருப்பு அழகானது
உன்னிடம் தான் ..
வேண்டுதலுக்குக் கடவுளை
ஏமாற்றுவது
உனைக் கொடுத்து தான் ...

பாண்டியன் சந்தேகத்தை
ஆண்டவன் தீர்த்த விளையாட்டின்
கரு நீ ...
இளமையின் உண்மை உரு நீ ..

உண்மையில் நம் தலையில் வைத்து
ஆடுவது மயிரை தான் ..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... தொடர வாழ்த்துக்கள்...