வாசம் ,
பூவின் இருப்பிடம் பிடிக்காமல்
காற்றுடன் ஓடிபோகிறதா ?
இல்லை ,
வழுக்கட்டாயமாக
காற்று பூவை திறந்து
வாசத்தைக் கவர்ந்து செல்கிறதா ?
கண்ணீர்,
கண்களை விட்டு வெளியே வந்து
தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறதா ?
இல்லை
பிறர் விரல் வந்து தன்னை
காப்பாற்றும் என்று விரும்பி குதிக்கிறதா ?
மழை ,
பூமியின் அழகைக் கண்டு
உருகும் மேகம் மழையாகிறதா ?
இல்லை
உலகின் நிலைக் கண்டு
அழும் மேகம் மழையாகிறதா ?
நிலவு ,
வானில் தவழ்கிறதா ?
இல்லை
மேகத்தில் மிதக்கிறதா ?
1 comment:
ஆகா... ரசிக்க வைக்கும் கேள்விகள்...
Post a Comment