பற்றி எரிந்து கொண்டிருக்கும்
அந்த வீட்டின் கூரையிலிருந்து
தற்கால ஓவியம் போல
நெளிந்து வளைந்து
வெளிவருகிறது கரும்புகை ...
இரவைச் சூழ்ந்திருக்கும்
இந்த இருட்டை விரட்டி விட்டபடி ,
அந்த வீட்டுக் குடும்பத்தை
மேலும் இருளில் தள்ளி விடுகிறது ..
ஒரு குடும்பத்தின் ஜீவனை
எரித்துக்கொண்டிருக்கும் அத்தீ ,
அந்தக் குடும்பத்தின் கண்ணீரால்
அனையுமெனத் தோன்றவில்லை ...
"உதவி செய்ய யாரேனும்
நிச்சயம் வருவார்கள் " என
அவர்களுக்கு ஆறுதலை
என் மனதிற்குள் சொல்லிக்கொண்டு ,
நாளிதழில் கடந்து போகும்
செய்தி போல் ,
நேரில் கண்ட இதை
கடந்து போய்க்கொண்டிருக்கிறேன் ....
No comments:
Post a Comment