ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...
பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...
முதல் பார்வையில் ,
மயக்கம்
பரவசம்
வெட்கம்
தயக்கம்
வியப்பு சந்திப்பு ...
ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு
சிரிப்பு
மகிழ்ச்சி
ஆறுதல்
ஆசை ...
ஒவ்வொரு ஆசையிலும் ,
மோகம்
தாகம்
காமம் தணியாத காதல் ...
ஒவ்வொரு காதலிலும் ,அன்பு மகிழ்ச்சி
உடைமையுணர்வு
பயம்
ஊடல் ...
ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம்
சோகம்
திகைப்பு
மோதல் கூடல் ...
ஒவ்வொரு கூடலிலும்,இன்பம்
உச்சம்
களிப்பு
மகிழ் மிகு கண்ணீர் முன்னம் விட
அதிகக் காதல் ..
இறுதிச் சந்திப்பில் ,
அதிர்ச்சி
திகைப்பு
காயம்
தனிமை ...
தனிமையில்,
சிரிப்பு
சோகம்
வலி மிகு கண்ணீர்
வெறுமை நினைவுகள் ...
ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள் ...!