தூங்காத இரவுகள் வேண்டும்
விடியாத இரவுகள் வேண்டாம்
களையாத கனவுகள் வேண்டும்
மாறாத கனவுகள் வேண்டாம்
உதிராத பூக்கள் வேண்டும்
வாசமில்லா பூக்கள் வேண்டாம்
சாய்க்காத புயல் வேண்டும்
வீசாத தென்றல் வேண்டாம்
களையாத மேகம் வேண்டும்
தூராத மேகம் வேண்டாம்
தாலாட்டும் பாடல் வேண்டும்
செவி பிய்க்கும் பாடல் வேண்டாம்
கருணைக் கொண்ட கண்கள் வேண்டும்
கலங்கும் கண்கள் வேண்டாம்
ஆறுதல் தரும் வார்த்தை வேண்டும்
காயம் தரும் வார்த்தை வேண்டாம்
நிழல் தரும் மரமாக மனது வேண்டும்
மரம் உதிரும் சருகாக மனம் வேண்டாம்
விடையாக வாழ்க்கை வேண்டும்
புதிராக வாழ்க்கை வேண்டாம்
பிறரை நேசிக்கும் பக்தி வேண்டும்
தன்னை மறக்கும் பக்தி வேண்டாம்
மனிதர்களாக மனிதர்கள் வேண்டும்
பொய்யாக மனிதர்கள் வேண்டாம்
மாசற்ற அன்பு வேண்டும்
பற்றற்ற அன்பு வேண்டாம்
நினையாத நினைவுகள் வேண்டும்
வலியாக நினைவுகள் வேண்டாம்
பிரியாத உறவுகள் வேண்டும்
உயிரற்ற உறவுகள் வேண்டாம்
வேண்டாதவையும் சில நேரம் வேண்டும்
வேண்டுபவையும் சில நேரம் வேண்டாம்
3 comments:
பொதுவாக எல்லோரது மனதிலும் எழும் வேண்டுதலும் வேண்டாததும்.அருமை ஜெயராம் !
நல்லவையும்,தீயவைகளும் கலந்து வாய்க்கப்பெற்ற சமூகவெளியில் பெரும்பாலானோரது வேண்டுதலும் இப்படித்தான் உள்ளது.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
@all...
கருத்து தெரிவித்த அனைத்து
நெஞ்சங்களுக்கும் நன்றி :)
Post a Comment