நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்குப் புரியாது
என் மனக்கண்ணாடியை
அணிந்து பார்த்தாலும் தெரியாதுஎன் மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதைப் படம் பிடித்து
கவிதையாய்ப் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா ?
எனது கவிதை புரியுமா ?
என் கவிதை புரியாததால்
நான் வருத்தப்பட முடியாது ...
என் வருத்தங்களை
கவிதையாய்ப் படைக்கையில்
அதுவும் பிறர்க்குப் புரியவில்லையென
வருத்தப்பட மாட்டேன் ...
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளைச் சேர்த்து
கவிதை தூரலாய்த் தூவுகிறேன் ...
அந்தத் தூறலில்
நனைவது
உனக்குப் பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது ...
என்ன செய்வது ,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகம் போல
சில நேரம் எனது கவிதை...
மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம் உனக்குப் புரியாது ...
5 comments:
அருமை நண்பரே !
உணர்வுகளை மிக நேர்த்தியாக சொல்லிப் போகும்
இந்தக் கவிதை யாருக்குத்தான் புரியாது
இல்லை யாருக்குத்தான் பிடிக்காது
வேண்டுமாயின் சிலர் புரியாதத்து போலவும்
பிடிக்காதது போலவும் நடிக்கலாம்
அதுவும் கூட இன்னும் அதிகம் கவிதைகள்
பெறுவதற்கான தந்திரமாகவும் இருக்கலாம்
மனம் கவர்ந்த கவிதை.தொடர வாழ்த்துக்கள்
அப்படியா தோழரே..
@all...
கருத்து தெரிவித்த அனைத்து
நெஞ்சங்களுக்கும் நன்றி :)
உண்மைதான் சில கவிதைகள் எழுதும் எமக்கு மட்டுமே புரியும்.உணர்வுகளைத் திணித்திருப்போம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவம் காட்டுமது.இந்தக் கவிதை உங்கள் எண்ணம் !
Post a Comment