Wednesday, December 25, 2013

காத்திருப்பேன் என் கண்ணீருடன் ...!






தினமும் உன்னைத் தேடி ,
நீ தரும் செல்வத்தை நாடி ..
உயிரை பணயம் வைத்து
படகில் பயணம் வைத்து வருவோம் ,
உன்னிடம் பிச்சை கொண்டு திரும்புவோம் ..

தினமும் எனை மட்டும் பார்த்தது ,
எனக்குத் தந்த செல்வம் போதாது
என என்னைக் காண வந்தாயே
என்னைக் காத்துவந்த தாயே ..

நீ தாய் தான் ,
தெய்வத்தாய் தான் ,
அதனால் தான்
என் வீட்டை காண வந்தாயோ ?
என் பிள்ளைகள் பிடித்துப்போய்
என் குடும்பத்தையும் உடன் கொண்டு சென்றாயோ ?
எப்போது என் குடும்பத்தைத் திரும்பி அனுப்புவாய் ?

அனுப்பும் வரை இங்கே காத்திருப்பேன்
என் கண்ணீருடன் ...!

1 comment:

Anonymous said...

வணக்கம்
தவிப்பின் துலங்கள் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இப்படியாக காத்திருப்பும் ஒரு சுகந்தான்.மனதை தளர விடமல் நம்பிகையுடன் இரும் நாளைய விடியல் நமக்காக மலரும்.. சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்