சில உண்மைகளின் உண்மை முகம்
பொய்யெனத் தெரிகையில் ,
நான் கடந்து வந்த தருணங்களை
என்னைக் கடந்து போன தருணங்களாக உணர்கையில் ,
மணமேடையில் வேற்றொருவனுடன்
அவளைக் கண்ட ஒற்றை நொடியில் ,
துரோகம் என் முகத்தில்
கருமை நிறம் பூசிய அந்த நொடியில் ,
பணமெனும் கண்ணாடியில்
உறவுகளின் உண்மை குணம் காண்கையில் ,
கடந்துவந்த, கடந்துபோன
காதல், பாசம், நட்பு, மனிதம்
எனப் பல நிமிடங்களின் நிறம் மாறிப்போகிறது..
அலைகளாக மனதின் எண்ணங்கள்
அதன் கரைகளாகக் காலங்கள் ..
போகிறபோக்கில் கரைகளின் வண்ணங்களை
அலைகள் அடிக்கடி மாற்றிப்போகிறது..
3 comments:
கவிதையும் மிகக் குறிப்பாக அதற்கான தலைப்பும்
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நிறம் மாறிய நிமிடங்கள் என்ற கவிதைத்தனமான தலைப்புக்கேற்ற நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
வாழ்வின் யதார்த்தத்தை அருமையாக கவி மூலம் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,,, தங்களுக்கு நேரரமிருப்பின் எனது பதிவு காண்க நன்றி.
My India By Devakottaiyan
Post a Comment