Wednesday, November 5, 2014

தவிப்பு ..!






பகலுடன்
ஓய்வெடுக்க
விடியலுக்காக
இரவெல்லாம் காத்திருக்கிறது
இருள்  ..

இரவுடன்
சேர்ந்துரங்க
இரவுக்காக
பகலெல்லாம் காத்திருக்கிறது
வெளிச்சம் ..

இரண்டும்
ஒன்றை ஒன்று சந்திக்கையில் ,
ஒன்றோடு
மற்றொன்று
தொலைந்து போகிறது ..
காத்திருப்பும்
தவிப்பாய்
தொடர்ந்து போகிறது ..

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
காத்திருப்பிலும் ஒரு சுகமிருக்கு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-