நான் யார்?
தான் ஒரு முட்டாள்
என்ற உண்மையை உணர்ந்த புத்திசாலி
பல நினைவுகளை மென்று தின்று
அதைச் சீரணிக்க முடியாமல்
இன்னும் மென்றுகொண்டிருப்பவன்
சில கவிதைகள் போல் சமயங்களில்
எத்தனை முறைப் படித்தாலும் புரியாதவன்
சோம்பலை துரத்தித் துரத்தி
காதலிப்பவன்
இணையத்தில் மட்டும்
அநியாயம் கண்டு பொங்கும் போராளி
எண்ணங்களை வார்த்தைகளில் நாட்டியமாட
பயிற்றுவிக்கும் பயிற்சியாளன்
தன் மன-சன்னலை
சில கொசுக்களுக்குப் பயந்து சாத்திவைப்பவன் ,
ஆனால் காற்றும் வருவதில்லை ..

No comments:
Post a Comment