Thursday, December 25, 2014

என்றும் போல அன்றும் ஒரு நாள்







என்றும் போல அன்றும் ஒரு நாள்
அழகாய் விடிந்தது ,
ஆனால் பூமித்தட்டு
மட்டும் சற்று அதிர்ந்தது ,
கடலும் தன் முகம் மாறி
நிலம் வந்து புகுந்தது ...
அன்று மட்டும்
கடலின் ஒவ்வொரு அலைகளிளும்
ஏனோ கொலைகள் விழுந்தன ,
பல உயிர்கள் மடிந்தன ..
உயிரற்ற உடல்களாக
உயிர் மட்டும் கொண்ட பிணங்களாக
உணவற்ற ஜனங்களாக
உறவற்ற வெற்று மனங்களாக
பல மக்கள் ..
ஆழிபேரலை வந்து ஆனது
ஆண்டுகள் பத்து ,
அதன் துன்பியல் நினைவுகள்
தொலைத்துப் போக முடியாத
சோக சொத்து ..

Sunday, December 21, 2014

நான் யார்?







நான் யார்?

தான் ஒரு முட்டாள்
என்ற உண்மையை உணர்ந்த புத்திசாலி ..

பல நினைவுகளை மென்று தின்று
அதைச் சீரணிக்க முடியாமல்
இன்னும் மென்றுகொண்டிருப்பவன் ..

சில கவிதைகள் போல் சமயங்களில்
எத்தனை முறைப் படித்தாலும் புரியாதவன் ..

சோம்பலை துரத்தித் துரத்தி
காதலிப்பவன் ..

இணையத்தில் மட்டும்
அநியாயம் கண்டு பொங்கும் போராளி ..

தன் மன-சன்னலை
சில கொசுக்களுக்குப் பயந்து சாத்திவைப்பவன் ,
ஆனால் காற்றும் வருவதில்லை ..