கனவின் நாயகன்
கண்ணுறங்கி போனான்
விதையாய் மாறியே
மண்ணுறங்கி போனான்
...
கனவு காணக் கற்றுத் தந்தவன்
கண்மூடும் வேளையிலும்
எங்களுக்கு வழிகாட்டிச் சென்றான்
...
ஊழல் தேசத்தில் பிறந்தோமே
எனக் கூனிக் குறுகி நிற்கையில்
நம்பிக்கை ஒளி ஊட்டிச் சென்றான்
...
உறங்காமல் கனவு காண
கற்றுகொண்டோம் உன்னிடம்
இன்று நீ ஏன் உறங்கி மறைந்து
போனாய் விண்ணிடம்
...
அறிவியலில் சிகரம் தொட்டவர்
ஆயிரமுண்டு ,
உன் போல் எங்கள்
இதயம் தொட்டவர் யாருமுண்டா ?
...
விடிவெள்ளி நீ மறைந்தாலும்
உந்தன் வெளிச்சம் மட்டும்
இதயத்தில் என்றுமுண்டு
...
உன் இரு கண்கள் கண்டது
பல கோடி மக்களின் கனவு ,
எங்கள் ஒவ்வொருவர்
இதயத்திலும்
பின்தொடரும்
உந்தன் கனவின் குரல்
...
1 comment:
வணக்கம்
மாமனிதர் மறைந்தாலும் அவரின் தடங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது கவிதை அற்புதம் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment