Sunday, February 20, 2011

நினைவுகள்..!



வட்டமான நினைவுகளின் நீளத்தை,
விட்டமிட்டு அளக்க முடியாது ..

மறக்க நினைப்பதையே
மறக்கச்  செய்யும் ..

நினைக்க நினைப்பதையே
நினைத்துக் கொல்லும் ..

கட்டிப் போட்டதை,
எட்டி உதைத்து
இட்டுச் செல்லும்
நினைவுகளில்..

உண்மைகளின் போலி
அசலாய் நினைவுகள்..

சில உணர்ச்சிகளின் 
கல்லறையாய் நினைவுகள்..

நினைப்பதால் நினைவுகளல்ல.
நினைக்க வைப்பதால் தான் நினைவுகள்..!

No comments: