Thursday, February 17, 2011

ஹைக்கூ-1




நிகழ்வுகள்..!

பிடிக்கவில்லை
கொலை செய்தேன்
தண்டனையில்லை,
நிகழ்வுகளை…!

வெற்றி-தோல்வி..!

தொடர்கிறேன்,
துரத்துகிறது
வெற்றி-தோல்வி..!

விண்மீன்..!
சிதறிவிடப்பட்ட
கோலங்களும்
அழகாக ஜொலிக்குமோ,
-விண்மீன்..!

அருவி..!
காதல் கொண்ட
காமமோ,
-அருவி..!

இசை..!
சத்தத்தின்
பூப்பெய்தல்
-சுரங்கள்..!

முயற்சி..!

கேள்விக்கும்
பதிலுக்கும் இடைப்பட்ட
தூரம்தான் முயற்சி…!

யோசனை…!

தினமும் யோசித்துக்  கொண்டிருக்கிறேன்
எது மாறாதது என்று?
சற்று நேரத்தில்
என் யோசனையே மாறிவிட்டது..!

குற்றம்..!

கொலை செய்துவிட்டேன்
குற்றம் யாருடையது,
கத்தியுடையதா?
என்னுடையதா?

No comments: