மேகம்
மண்ணில்
இட்ட முத்தங்களா ?
மேகங்களின்
மோகங்களின்
பிள்ளையா?
பூங்காற்று
போட்ட
மாறுவேடமா?
வானம்
பூமிக்கு போடும்
அட்சதையா ?
இல்லை
மானுடம்
கண்டு
வானம் காரி
உமிழும் எச்சிலா ?
பூமிக்கு
மேகம் தரும்
பரிசா ?
மேகம் பூமியில்
உயிர்கள் கருத்தரிக்க
தந்த விந்தோ ?
எங்கள் தாகத்திற்கு
வானம்
மேகத்திடம் பட்ட
கடனா ?
மேகங்கள்
தற்கொலை செய்து
பூமியின் மீது
விழுந்தனவா ?
இல்லை
பூமியின்
அழகைக் கண்டு
மேகம்
மயங்கி விழுந்தனவா ?
பருவக் காற்று
பூமிக்குப் பாடும்
வசந்த தாலாட்டா?
கருமை இட்ட
மேக விழிகளில் இருந்து
வழியும் கண்ணீரா ?
இடியின் அதட்டலுக்கு
பயந்து மேகம்
சிந்திய கண்ணீரா?
எதுவோ ,
கிழிந்துவிட்டது எனது குடை
இனி நான் அழகாய் ரசிக்கலாம்
மழை ..!
13 comments:
// மேகங்களின்
மோகங்களின்
பிள்ளையா? //
ஒருவேளை அப்படி இருக்குமோ...
பதிவுலக கும்பலில் சேராமல் ஒதுங்கியே இருந்தால் எப்படி...
மயங்கிருச்சு!!
பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்
எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..
நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...
சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்
//மேகம் பூமியில்
உயிர்கள் கருத்தரிக்க
தந்த விந்தோ ?//என்ன ஒரு கற்பனை கலக்கல் அன்பரே
@Philosophy Prabhakaran ...
இருக்கலாம் :)... கருத்துக்கு நன்றி ...
இப்போ தான் பதிவுலகல சேர்ந்திருக்கேன்,
இன்னும் புல்லா கோதாவுல குதிக்க கொஞ்ச நாள் ஆகும் ...
கூடிய விரைவில் புல்லா இறங்கிறேன் :)...
@பொதினியிலிருந்து... கிருபாகரன் ...
//மயங்கிருச்சு!! //..
மயங்கி இருக்கலாம் :)
கருத்துக்கு நன்றி ...
@suryajeeva...
நான் இவ்வளவு கஷ்ட பட்டு கேள்வி கேட்டேன் ..
நீங்க நிதர்சன உண்மையை
பதிலா சொல்லீடீங்க ...:)
கருத்துக்கு நன்றி ...
சி.பிரேம் குமார் ...
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும் நன்றி நண்பரே
//எதுவோ ,
கிழிந்துவிட்டது எனது குடை
இனி நான் அழகாய் ரசிக்கலாம்
மழை ...!//
முத்துக்களை, மழை முத்துக்களை
வைத்து
சத்துமிகு கவிதை வரிகள்
நல்ல
முத்து மாலையாக்கி விட்டீர்
அழகு!
புலவர் சா இராமாநுசம்
@புலவர் சா இராமாநுசம் s..
ஐயா,
தங்கள் வருகைக்கும் முத்தான தங்கள் கருத்துக்கும்
மிக்க நன்றி :)
மேகங்கள் பெய்யும் மழையில் இத்தனை ரசிப்புகளும் அர்த்தங்களுமாய் பொதிந்திருக்க நாம் இனி கவலை கொள்ள வேண்டாம் எனவே நினைக்கிறேன்.தங்களது ஒரு கவிதை படித்தாலே ரசிப்பு மனோபாவம் வந்து விடும் போல இருக்கிறது.
@விமலன் ..தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
Post a Comment