Tuesday, November 8, 2011

எங்களைத் தெரியுமா ?




எங்களைத் தெரியுமா ?
கணிப்பொறியோடு விளையாடி
அதனோடு உறவாடி
வேலை செய்யும் வித்தைக்காரர்கள் நாங்கள் ..

பொய் பேசும் மனிதன் பார்த்து 
வியாபாரம் செய்யாமல் ,
செய்ததைச் சொல்லும் கிளிப்பிள்ளையாம் 
கணினி பார்த்து
வியாபாரம் செய்பவர்கள் நாங்கள்..

கைநிறைய சம்பளம் வாங்கும்
நவயுக Pharaoh இன் அடிமைகள் நாங்கள் ...

உடல் உழைப்பை இழந்ததால் ,
மன உளைச்சலை
இலவசமாகப் பெற்றவர்கள் நாங்கள் ..

இப்படி வேலை செய்து
கண்களுக்கும்
எங்கள் கண்ணடிக்கும்
திருமணம் செய்து வைப்பவர்கள் நாங்கள் ...

A/C அறையில்
எப்போதும் சூடாக 
வேலை செய்பவர்கள் நாங்கள் ..

குடும்பங்களை மறந்து
வேலை செய்யும்
வண்ண உடை அணிந்த
கணினியில் உலகம் தேடும்
புதிய வகைச் சந்நியாசி நாங்கள்..

ஒட்டு போடும் நாளில் கூட
எங்கிருந்தோ எங்கள் சம்பள நோட்டு போடும்
அந்நிய துரைகளுக்கு
விசுவாசமாக இருந்து கொண்டு ,
நாட்டில் நடக்கும் ஊழல் பற்றிப் பேசும்
தேசியவாதிகள் நாங்கள்..

வேலையில்
மூளையில் பளு சுமக்கும்
வேலைக்காரர்கள் நாங்கள்..

வேடந்தாங்கல் பறவையாக
அவ்வப்போது குடும்பக் கூட்டுக்குள்
வந்து செல்லுபவர்கள் நாங்கள்..

இன்னுமா தெரியவில்லை ?
மனதில் அழுத்தம் கூட்டும்
வேலைப்பளுவில் இருக்கும்
மென்பொருள் காரர்கள் நாங்கள்..

8 comments:

Philosophy Prabhakaran said...

cool... கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடாது... இஷ்டப்பட்டு வேலை செய்யணும்...

Philosophy Prabhakaran said...

Pharoah என்ற வார்த்தையை ஆராய்கிறேன்... புதுசா இருக்கு...

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
ஆயினும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு
ஒருவகையில் உதவுபவர்களாகவும்
நடுத்தரம் தாண்டி யோசிக்கத் தெரியாத
தாய் தந்தையருக்கு சில உச்சங்களை
அறிமுகம் செய்பவர்களகவும் நீங்கள் தானே இருக்கிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
த.ம 2

SURYAJEEVA said...

சூப்பர் சார்... அவர்கள் கைகள் கட்டப் பட்டிருந்தாலும் பலர் இன்னும் வலை பூக்களில் விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம்...

Thooral said...

@Philosophy Prabhakaran s...
கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடாது... இஷ்டப்பட்டு வேலை செய்யணும்....
ஆனா நாம
இஷ்டப்பட்டு செய்யுற வேலையில
நாம கஷ்டப்படும் போது
நம்முடைய கடின உழைப்பு உதாசீன படுத்தப்படும் போதும் ,
நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும்
வெகு நேரம் செலவழிக்க முடியாமல் போகும் போதும் இந்த மாதிரி உணர்வ தவிர்க்க முடியல ..:(

Thooral said...

@Ramani..
நீங்கள் சொல்வது உண்மை தான் ..ஆனா சில நேரம் அந்த தாய் தந்தையிடம் கூட நேரம் செலவழிக்க முடியாமல் போகும் போது
சிறிது விரக்தி ஆகிறது

Thooral said...

@suryajeeva s...
நீங்கள் சொல்வது ௧௦௦ க்கு ௧௦௦ உண்மை

Thooral said...

@Philosophy Prabhakaran s...
Pharoah ..என்பது பண்டைய எகிப்து அரசர்களை குறிக்க பயன் படும் சொல் ..
எல்லாம் நம்ம கமல் ஜி அன்பே சிவம் படத்துல சொன்ன கருத்து தான் இது