நேரங்கள் உடைந்து
உதிர்ந்து சிதறி,
காலத்தின்
கடைசிப் படிக்கட்டில்
தொங்கிக்கொண்டு இருக்கும் நொடிகள்,
பல நேரம்
நொடிகளாகக் கடப்பதில்லை ,
யுகங்களாகக் கனக்கிறது ..
காலமெனும் அணைக்கட்டில்
வாழ்கையெனும் மதகுகளின்
திறவுகளுக்கு ஏற்பவே
நொடிகள் யாவும்
ஒவ்வொரு நொடியும்
பயணமாகிறது ..
வாழ்க்கையின் முற்புறத்தில் ,
காலம் வைக்கும்
ஒவ்வொரு புள்ளியிலும்
கோலமிடுகிறது நொடிகள் ..
காலத்தின் கணக்குகளில் சிக்காமல்
நொடியில் பல காலம்
கடந்து செல்லும்
நினைவுகளின் கணக்குகளை
காலம் இன்னும் தீர்த்துக் கொண்டிருக்கிறது ..
6 comments:
அருமை அருமை
உங்கள் சிந்தனையின் வேகத்திற்கு
வார்த்தைகளும் வந்து சேர்ந்து ஆச்சரியப் படுத்துகின்றன
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
வார்த்தை கோர்வைகள், மீண்டும் மீண்டும் வாசிக்கும் பொழுதும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது
@ரமணி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..:)
@suryajeeva ...
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)
"பல நேரம்
நொடிகளாக கடப்பதில்லை,
யுகங்களாக கனக்கிறது .."
வரிகள் மிக அருமை...
மூ.பழனிவேல்
manidam.wordpress.com
@manidam ...
தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ..:)
Post a Comment