முற்புறத்தில் நின்று
தனியாக ஆடுகிறது
முன்னும் பின்னும்
வாசல் கதவு ..
சில நேரம்
பிஞ்சுகளின்
துணையோடும் ..
முன்னும்
பின்னும் ஆடுகையில்
அவையிடும் சத்தங்களை
முதுமையின்
கதறல்களாகக் கொள்ளவா ?
தனிமையின் துயரம் சொல்லும்
அழுகையாகக் கொள்ளவா ?
பிஞ்சுகளின் கை பிடித்து
விளையாடிய மகிழ்ச்சி சொல்லும்
சிரிப்பாகக் கொள்ளவா ?
12 comments:
சொற்களை அடுக்கி சிலம்பம் ஆடுவது இது தானோ
தேய்ந்த மூட்டுக்கள் என்ற முதுமை மட்டுமே எனக்கு தோன்றுகிறது...
முன்னும்
பின்னும் ஆடுகையில்
அவையிடும் சத்தங்களை
முதுமையின்
கதறல்களாக கொள்ளவா ?
தனிமையின் துயரம் சொல்லும்
அழுகையாக கொள்ளவா ?
நல்ல வரிகள் .வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்
http://www.kovaikkavi.wordpress.com
மிக மிக அருகிருந்தும்
அடிக்கடி கேட்டும் யாரும் யோசிக்காத விஷயம்
அருமையான கற்பனை
அருமையான் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
கவிதையை கண்டபோது,
கதவை பிடித்து விளையாண்ட ஞாபகம் கண் முன்னே வருகிறது தோழரே...
அருமையான ஆக்கம்,
வித்தியாசமான சிந்தனை...
@suryajeeva s...
முதலில் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி:)..
உண்மை தான் நம் வீடு முதியவர்களின் இருமல் சத்தம் போல தான் அந்த முதிர்ந்த வாஸ்ஸல் கதவுகளும்
@vetha. Elangathilakam. ..
தங்கள் வருகைக்கும் முத்தான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி :)..
@Ramani s...
தங்கள் வருகைக்கும் முத்தான கருத்துக்கு மிக்க நன்றி ..
@manidam s...
தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கு மிக்க நன்றி ..
பிஞ்சுகளின் கைபிடித்து விளையாடுகின்ற மகிழ்ச்சியே மகிழ்ச்சி.நல்ல கற்பனை.கதவு பேசுகிறது.கதவு விளையாடுகிறது.கதவு நடமிடுகிறது.இப்ப்டியாக பலபலவாக செய்கிற கதவைப்பற்றிய நல்ல கற்பனை.
ஆடும் கதவதனை
ஆடவிட்டு நல்லதொரு
பாடும் பாடலொன்று
படைத்திட்டீர் நீர்வாழ்க
கூடும் மகிழ்விங்கே
கொஞ்சும் தமிழிங்கே
நாடும் பலனளிக்க
நவின்றீரே நீர்வாழ்க!
புலவர் சா இராமாநுசம்
@விமலன் ...
தங்கள் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@புலவர் சா இராமாநுசம் s..
தங்கள் பாடலால்
என்னை வாழ்த்தி என்னை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி ஐயா ...
Post a Comment