என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றார்போல்
என் பாதை ஓடினாலும் ,
என் மனம் மட்டும்
சில தருணங்களில்
எங்கோ தொலைந்து விடுகிறது ..
அப்படிச் சில தருணங்களின்
காட்சிகளில்
நான் இருப்பதால் ,
அந்தக் காட்சியில்
தொலைந்து போகிறேன் ..
என் மனம்
தொலைந்து போகும்
வேளையில் ,
தொலைந்த இடத்திலிருந்து
தெரிந்த இடத்திற்கு
தெரியாத திசை நோக்கி
என் மனதோடு ஒரு சிறு பயணம் ..
நான் அந்தப் பயணத்தில்
முன்னோக்கி நடக்க
நான் வந்த பாதை
என்னை நோக்கி
பின்னோக்கி நடக்கிறது ..
காலமோ
என்னை நோக்கி
பின்னோக்கி
வேகமாய் ஓடுகிறது ..
சில நேரம்
என்னையும் தாண்டி ஓடுகிறது ..
அஃது இட்டுச் சென்ற இடம்
என் மனதின் கூடம் ..
எழுவதும்
கரை தொட முனைவதும்..
தோற்றாலும் பின்
கடல் வந்து எழும் அலையாக உள்ளது
என் மனம் ..
அந்தப் பயணப்படும்
வழியெங்கும்
தன்னுள் இருக்கும் நினைவுகளை
பதியம் போடுகிறது மனது ..
அந்தப் பதியம் விளைந்தால்
மனதிலே பூக்கள் பூக்கும் ..
அந்தப் பூக்களின் வாசமே
தொலைந்து போன பாதையை
மீட்டுத் தரும் ..
பதியம் கருகினால்
மனதில் ரணமான
காயங்களை மீண்டும் குத்திக்காட்டி,
அந்த வலியே
தொலைந்து போன பாதையை
மீட்டுத் தரும் ..
இப்படியாக
எப்படியோ
அந்தப் பயணத்திலிருந்து
மீண்டும்
மீண்டு வந்தேன் ..
இப்படி
முன்பின் தெரியாத நபரை
பார்த்துச் சிரிக்கும் சிறு குழந்தையாகவே
முன் நடந்த சம்பவம் எண்ணி
சம்பந்தமின்றி
சிலநேரம் சிரிக்கிறேன்,
மனதோடு பயணமாகிறேன் ..
அதில் ஒளிந்திருக்கும்
அழகையும்
ரணத்தையும்
ரசிக்கிறேன் ...
இப்போது இல்லை
எப்போது நினைத்தாலும்
வியப்பாக உள்ளது
இந்தப் பயணம் ..
9 comments:
எல்லோருக்கும் சில சமயங்களில் நேருகிற
மயக்கம்தான் ஆயினும் யாரால் இப்படித் தெளிவாக
இந்தக் குழப்பத்தை சொல்ல முடிகிறது
அல்லது சொல்லத் தெரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த,ம2
வணக்கம் ஜெயராம்.முன்பக்கக் கவிதைகள் எல்லாமே பார்த்தேன்.மழை,மனிதன் அஃறினையா உயர்திணையா மிக மிகப் பிடிக்கிறது.தொடர்வோம்.நன்றியும் வாழ்த்தும் !
அது இட்டு சென்ற இடம்
என் மனதின் கூடம் ..
எழுவதும்
கரை தொட முனைவதும்..
தோற்றாலும் பின்
கடல் வந்து எழும் அலையாக உள்ளது
என் மனம்//அருமை அன்பரே
எல்லோரும் உணரும் விஷயங்களை அழகிய கவிதையாகி விட்டீர்கள்.
த.ம.4
@Ramani..
தங்கள் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@ஹேமா s...
தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி
@சி.பிரேம் குமார் ...
தங்கள் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
@சென்னை பித்தன் ...
தங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ...
Post a Comment