Saturday, November 19, 2011

மேகம் ..!




வானமெனும் சுவரில்
வான்கோ,
டா வின்சி
வரைந்த ஓவியமா நீ ?

நிலவவள் நாணி
தன் முகம் புதைத்துக் கொள்ளும்
போர்வையா நீ?

சூரியன் வெயில் காலத்தில்
தன் முகம் துடைக்கும்
கைக்குட்டையா   நீ ?

சூரிய ஒளியை
சலித்தெடுக்கும்
சல்லடையா நீ?

காற்று வளி மண்டலத்தில்
விடப்படும்
கப்பலா நீ ?

இடி போட்ட
அரட்டலுக்குப் பயந்து
கண்ணீர் சிந்துவாயா நீ ?

வான்வெளியில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

கார்கால நேரத்தில்
கருப்பு மை அப்பிக் கொள்வாயா நீ ?

வானமெனும் கட்டிலில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

வானமகள் காலையிலும்
மாலையிலும்
தன் வீட்டு வாசலில்
இடும் கோலமா நீ?

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போவாய்
என மனிதன் உணர
கடவுள் எழுதி வைத்த தத்துவமா நீ ?

18 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போவாய்
என மனிதன் உணர
கடவுள் எழுதிவைத்த தத்துவமா நீ ?

அழகிய சிந்தனை நணபா!

அம்பாளடியாள் said...

அழகிய கவிதை வாழ்த்துக்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

SURYAJEEVA said...

வெண் பஞ்சு போல் இருந்தால் குழந்தைக்கு பிடிக்கும்..
கருப்பாக வந்து பயமுறுத்தினால் விவசாயிக்கு பிடிக்கும்...
அதே நேரம் மிரண்டு தான் போவான் செங்கல் சூலைகாரன்...
கவிஞர்களுக்கு மட்டும்
எப்படி இருந்தாலும் பிடிக்கும்

சென்னை பித்தன் said...

மேகம் பற்றி இவ்வளவு உணர்வுகளா?அருமை.

Thooral said...

@நம்பிக்கைபாண்டியன் ....
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@அம்பாளடியாள் ....
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@சென்னை பித்தன் ....
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.

Thooral said...

@suryajeeva..

உண்மை தான் தோழரே ..
கவிஞர்களுக்கு மட்டும்
எப்படி இருந்தாலும் பிடிக்கும்..
வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான படைப்பு..
அருமை.

Yaathoramani.blogspot.com said...

அடேயப்பா
மேகம் குறித்த தங்கள் கற்பனை
அந்த வானம்போல விரிந்து விரிந்து
மிக அற்புதமான கவிதை மழையாக
பொழிந்ததைக் கண்டு மனம் பூரித்துப் போனேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

Thooral said...

@முனைவர்.இரா.குணசீலன் ....
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி...

Thooral said...

@Ramani ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@முனைவர்.இரா.குணசீலன் s..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Anonymous said...

"வானமெனும் சுவரில்
வான்கோ,டா வின்சி
வரைந்த ஓவியமா நீ ?"

ஆரம்ப வரிகளே அற்புதம்...
அழகான படைப்பு...
ஆழமான கற்பனைகள்...

Thooral said...

@manidam ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

ஹேமா said...

யாரும் சொல்லாத நிறைவான சிந்தனை.இதைத்தான் கவிஞனின் கண்ணை கவிக்கண் என்றார்களோ !

Thooral said...

@ஹேமா ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..