Wednesday, November 23, 2011

என்னைத் தேடும் நினைவுகளுக்கு ..



என்னைத் தேடும் நினைவுகளிடம்
நான் என்ன சொல்ல வேண்டும் ?
உண்மைகள் பொய்த்ததால்
தொலைந்து போனேன் என்றா ?

தூரங்களில் உள்ள நியாயங்கள்
சில நேரம் கோபம் தரும்
காலம் தரும் பதிலில் மட்டுமே
அந்த நியாயங்கள் விளக்கம் பெறும்

இரயில் சன்னல் ஓரம்
வானம் பின் தொடர்கையில்

மேரி தாயின் முன் நின்று கொண்டு
தனியே அழும் மெழுகுவத்தியின் கண்ணீரில்

இரவில் உறக்கத்தில் தொலைந்து போகும்
என்னைத் தேடும் கனவுகளில்

வரவேற்பறை மீன் தொட்டிக்குள் வாழும்
ஒற்றைத் தங்கமீனின் தனிமையில்

இப்படி இவை அனைத்திலும்
உன் தேடல் தெரிந்தும்
நான் எதுவும் செய்வதற்கில்லை

என் முகம் இழந்த உடலோடு
முகமூடி அணிந்து பேச முடிவதில்லை

ஊமையின் வாய் அசைப்பில்
பேச்சு வருவதில்லை
இந்தத் தேடலின் முடிவில்
நான் சிக்குவதில்லை ...


14 comments:

Yaathoramani.blogspot.com said...

சிந்த்னையின் ஆழமும் மொழி லாவகமும்
என்னை பிரமிக்கச் செய்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

பூங்குழலி said...

என் முகம் இழந்த உடலோடு
முகமூடி அணிந்து
பேச முடிவதில்லை ...

அருமை

SURYAJEEVA said...

இந்த கவிதை வேறு ஒரு தளத்தில் பயணம் செய்கிறது...

Thooral said...

@Ramani ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@பூங்குழலி ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@suryajeeva s...
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Unknown said...

// என்னை தேடும் நினைவுகளிடம்
நான் என்ன சொல்ல வேண்டும் ?//

இக் கேள்வியை எழுப்பி பல் வேறுநிகழ்வுகளை கவிதை சொல்லிச் செல்கிறது
நன்று!

த ம ஓ 3

புலவர் சா இராமாநுசம்

ஹேமா said...

தேடும் நினைவுகள் மனம் விட்டுப் பேசுகின்றன !

Thooral said...

@புலவர் சா இராமாநுசம் ...
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Thooral said...

@ஹேமா ..
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

மாலதி said...

உண்மையில் இந்த ஆக்கத்திற்கு நான் பின்னூட்டமிட வார்த்தைகளைத் தேடுகிறேன் கிடைக்கவில்லை சிறப்பான வரிகள் பாராட்டுகள் நன்றி .

Thooral said...

@மாலதி ..

தங்கள் முதல் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி..

Anonymous said...

உணமையில் நன்றாக உள்ளது. பிடித்துள்ளது. வித்தியாசமாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரா. தொடருங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/

Thooral said...

@kovaikkavi...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி