எனக்கொரு ஆசை
மீண்டும்
என் முதல் உலகிற்குச் செல்ல ...
நீர் சூழ்ந்த உலகம் அது ,
காற்று என்பதே கிடையாது ,
இருள் நிறைந்த உலகம் அது,
பயம் என்பதே கிடையாது ..
அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்க்கை
வெளிச்சமாய் இருந்தது..
கிட்டத்தட்ட
அஃது ஒரு
தனிக்குடித்தனம்
ஆனாலும் தனியாக இல்லை ..
உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..
வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம் ..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு ..
மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை ,
காதல் இல்லை ,
காமம் இல்லை ..
இரவின் நிலவு போல ,
அங்குத் துணையாக யாரும் இல்லை ,
தனிமையைத் தவிர ..
ஆனாலும் அங்கேயும் ,
நிலவைத் தாங்கும் வானம் போல
எனையும் தாங்க ,
எனக்காகச் சுவாசிக்க ,
எனக்காக உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன் ..
என் தாய் ..
ஆம் !எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்குச் செல்ல ..
9 comments:
சார், மிகவும் அருமையாக இருந்தது... ஒன் வே என்பதால் உங்கள் ஆசை நிராசை தான்
@suryajeeva ...
உண்மை தான் சார் ..
அது ஒன் வே ..:(
கருத்துக்கு நன்றி
மீண்டும் கருவறை புகவேண்டி
அருமையான கவி படைத்தீர்கள் நண்பரே...
ஆம நன்றாக உள்ளது சகோதரா. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம
ம்...கிடைக்குமா மீண்டும்.வஞ்சகமில்லா உலகம் அதுதான் !
@மகேந்திரன் ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
@kovaikkavi ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
@ஹேமா ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அருமை, அருமை நண்பரே...
Post a Comment