Saturday, December 3, 2011

நான் யார் ?




என்னிடம்
எதுகையில்லை ,
மோனையில்லை,
சந்தமில்லை ,
மரபு இலக்கணப்படி
கவிதைக்கான எந்த
பந்தமும் இல்லை ..!
அப்படி என்றால்
நான் யார் ?

என்னிடம்
ஒரு கதைக்கான
தொடக்கமுமில்லை ,
அதை விளக்கும் சம்பவமுமில்லை ..
அதற்கான முடிவுமில்லை ,
இவை அனைத்தும் சொல்லும்
கருவுமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னில்
ஒரு கட்டுரைக்கான
ஆரம்பமும் இல்லை
முன்னம் வந்த வரிக்கும்
பின்னம் இருக்கும் வரிக்கும்
எந்த ஒரு தொடர்பும் இல்லை ..
இவை அனைத்தும் விளக்க
எந்த ஒரு கருத்துமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னைப் படித்தால்
புரியவில்லை
புரியாமலுமில்லை..
இவையாவும் படித்தால்
அர்த்தம் புரியாமலிருக்க
கிறுக்கலும் இல்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

2 comments:

ஹேமா said...

நீங்கள் கவிதைகளேதான்.எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்திக் கிடக்கிறது.மனப் பாரங்களைக் குறைகிறீர்கள் !

Thooral said...

@ஹேமா s..
இதை கவிதை என்றதற்கு நன்றி ...